மாங்குளம், பொத்துவிலில் இரு விபத்துக்கள்; இருவர் பலி

மாங்குளம், பொத்துவிலில் இரு விபத்துக்கள்; இருவர் பலி

மாங்குளம், பொத்துவிலில் இரு விபத்துக்கள்; இருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

05 Mar, 2014 | 12:22 pm

மாங்குளம் மற்றும் பொத்துவில் ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பொத்துவில்லில் இருந்து உல்ல பகுதிக்கு சென்ற மோட்டார் சைக்கிளொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாய் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, மாங்குளத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று வீதியைவிட்டு விலகி மதில் மீது மோதி விபத்துக்குள்ளானதில்  ஒருவர்  உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிபபிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்