மன்னார் மனிதப்புதைகுழியில் அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

மன்னார் மனிதப்புதைகுழியில் அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

மன்னார் மனிதப்புதைகுழியில் அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

05 Mar, 2014 | 8:55 am

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் 32ஆவது நாளாக இன்றும் தொடரவுள்ளன.

இறுதியாக கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது இரண்டு மண்டையோடுகள் மீட்கப்பட்டன.

இந்த மனித புதைக்குழியில் இருந்து இதுவரை 80 மண்டையோடுகளும், எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன.

திருக்கேதீஸ்வரம் பகுதியில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் நீர் குழாய் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களால் இந்த புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் இந்த மனித புதைக்குழியில் புதைக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை.

மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் 27ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்