மனித உரிமைகள் பேரவையில் ஜீ.எல்.பீரிஸ் இன்று உரை

மனித உரிமைகள் பேரவையில் ஜீ.எல்.பீரிஸ் இன்று உரை

மனித உரிமைகள் பேரவையில் ஜீ.எல்.பீரிஸ் இன்று உரை

எழுத்தாளர் Staff Writer

05 Mar, 2014 | 8:46 am

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 25 ஆவது கூட்டத்தொடரில், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பிரீஸ் இன்று உரையாற்றவுள்ளார்.

இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்ட பிரேரணை வரைபு தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இதன்போது வெளிவிவகார அமைச்சர் தெளிவூட்டவுள்ளதாக, ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தெரிவிக்கின்றார்.

இதேவேளை, நேற்று நடைபெற்ற உயர்மட்ட அமர்வின்போது தமது எழுத்து மூல அறிக்கையை முன்வைத்து உரையாற்றிய தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்கான அமைச்சர், இலங்கை மக்கள் மத்தியில் புரிந்துணர்வு ஏற்பட வேண்டும் என கூறினார்.

இத்தகைய கலந்துரையாடல் மூலம் நிரந்தர தீர்வினை அடைய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என குறிப்பிடப்பட்ட பிரேரணை வரைபு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 25ஆவது  கூட்டத் தொடரில் அமெரிக்கா, பிரித்தானியா, மொன்டினேக்ரோ, மெஸிடோனியா மற்றும் மொரிசியஸ் ஆகிய நாடுகள் சமர்ப்பித்துள்ளன.

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன மற்றும் முறையான விசாரணையை நடத்துவதற்கு தவறினால் சர்வதேச விசாரணையை நடத்துமாறு அந்த வரைபில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்