பாலியல் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை

பாலியல் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை

பாலியல் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

05 Mar, 2014 | 10:23 am

பாலியல் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும் என அகில இந்திய பாலியல் தொழிலாளர்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

பாலியல் தொழிலாளர்கள் 40 முதல் 45 வயதுக்குள் இத்தொழிலில் இருந்து ஓய்வுபெறும் நிலையில் அவரும், அவரது குடும்பத்தினரும் வசிப்பிடமும் வாழ்வாதாரமும் இல்லாமல் தவிப்பதாகவும், எனவே பாலியல் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவேண்டும் எனவும் அந்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலியல் தொழிலாளர்கள், தங்கள் குடும்பத்தை விட்டு இடம் மாறி வாழ்வதால், அவர்களுக்கு வாக்காளர் அட்டை கிடைப்பதில்லை, எனவே இது தொடர்பில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்