நீரை பயன்படுத்துவது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

நீரை பயன்படுத்துவது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

நீரை பயன்படுத்துவது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

05 Mar, 2014 | 9:26 am

வரட்சியான காலநிலையினால் ஏற்பட்டுள்ள நீர் தட்டுப்பாடு காரணமாக, வேறு நிறுவனங்களினால் விநியோகிக்கப்படும் நீரை பயன்படுத்துவது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

நீரை பெற்றுக்கொள்ளும் நீர் நிலைகளின் தரம் தொடர்பில் ஏற்படக்கூடிய சிக்கல்களினால் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியம் என சபையின் பொதுமுகாமையாளர் ரஞ்ஜித் பாலசூரிய தெரிவிக்கின்றார்.

தரமற்ற நீர் நிலைகளில் இருந்து பெறப்படும் நீர் தொடர்பில் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொறுப்புக்கூறாது என பொதுமுகாமையாளர் குறிப்பிடுகின்றார்.

நீரை விநியோகிப்பதில் சிக்கல் நிலவும் பகுதிகளுக்கு பௌசர்களின் ஊடாக நீரை விநியோகிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

வரட்சியான காலநிலையால் மக்களின் நீர் பாவனை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டிய பொதுமுகாமையாளர், இதனாலேயே நீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கின்றார்.

இதனால் மொரட்டுவை, பிலியந்தலை மற்றும் ஹோமாகம ஆகிய பகுதிகளுக்கு குறைந்தளவு நீரே விநியோகிக்கப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பொதுமுகாமையாளர் குறிப்பிடுகின்றார்.

நீர் பற்றாக்குறை நிலவுகின்றமையினால், வேறு நிறுவனங்கள் பௌசர் மூலம் நீரை விநியோகிக்கின்ற போதிலும், இந்த நீர் எங்கிருந்து பெறப்படுகின்றது என மக்கள் அவதானம் செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால், சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான நீரே விநியோகிக்கப்படுவதாகவும், வேறு நிறுவனங்கள் விநியோகிக்கும் நீரினால் நோய்கள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பொதுமுகாமையாளர் ரஞ்ஜித் பாலசூரிய மேலும் சுட்டிக்காட்டுகின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்