தெலங்கானா மாநிலம் ஜூன் உதயம்

தெலங்கானா மாநிலம் ஜூன் உதயம்

தெலங்கானா மாநிலம் ஜூன் உதயம்

எழுத்தாளர் Staff Writer

05 Mar, 2014 | 12:53 pm

இந்தியாவின் 29ஆவது மாநிலமாக எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதி தெலங்கானா உதயமாகவுள்ளதமாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜூன் 2ஆம் திகதி முதல் தெலங்கானா, தனி மாநிலமாகவே செயற்பட ஆரம்பிக்கும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துளள்து.

ஆந்திராவிலிருந்து பிரித்து தனித் தெலங்கானா மாநிலம் அமைப்பதற்கு நாடாளுமன்றம் கடந்த மாதம் 20ஆம் திகதி ஒப்புதல் அளித்தது.

அத்துடன் தெலங்கானாவுக்கும், சீமாந்திரத்துக்கும் ஹைதராபாத் பொதுத் தலைநகரமாக 10ஆண்டுகள் செயல்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்து.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்