ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது ஐ.நாவின் வரைபுத் தீர்மானம் – மு.கருணாநிதி

ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது ஐ.நாவின் வரைபுத் தீர்மானம் – மு.கருணாநிதி

ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது ஐ.நாவின் வரைபுத் தீர்மானம் – மு.கருணாநிதி

எழுத்தாளர் Bella Dalima

05 Mar, 2014 | 8:18 pm

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரைபுத் தீர்மானம், அனைத்துத் தரப்பிலும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளதாக திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இரண்டு தடவைகள் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எந்தவித ஆக்கப்பூர்வமான விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவற்றைப் போன்று தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானமும் இலங்கை அரசாங்கத்தினால் புறக்கணிக்கப்படும் என்பதுடன், எந்தவொரு பயனையும் இலங்கைத் தமிழர்களுக்கு பெற்றுக்கொடுக்காது எனவும் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

எனவே, டெசோ சார்பிலும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பிலும் பலமுறை வலியுறுத்தப்பட்டுள்ளதன் பிரகாரம், இந்திய அரசாங்கமே ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தனித் தீர்மானத்தை கொண்டுவந்து, அதனை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டுவரவிருக்கும் தீர்மானம் பெருமளவுக்கு தீர்வு காணும் ஒன்றாக இருக்கும் என உலகில் வாழும் தமிழர்கள் எதிர்பார்த்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்