இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

எழுத்தாளர் Staff Writer

05 Mar, 2014 | 1:30 pm

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

இந்த விஜயத்தின்போது ஜப்பானியத் தூதுவர், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டதாக எமது யாழ். பிராந்திய செய்தியாளர் கூறினார்.

வட மாகாண உள்ளூராட்சி அலுவலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பில் மாகாணத்தின் மருத்துவ தேவைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்