இரணைமடு குளத்தை மாத்திரம் நம்பியிருப்பது விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் – வீ.ஆனந்தசங்கரி கடிதம்

இரணைமடு குளத்தை மாத்திரம் நம்பியிருப்பது விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் – வீ.ஆனந்தசங்கரி கடிதம்

இரணைமடு குளத்தை மாத்திரம் நம்பியிருப்பது விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் – வீ.ஆனந்தசங்கரி கடிதம்

எழுத்தாளர் Bella Dalima

05 Mar, 2014 | 7:29 pm

இரணைமடு திட்டம் தொடர்பில் விரைவில் சரியான முடிவை எடுக்குமாறு தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

வட மாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இரணைமடு குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் வழங்கும் விடயம் தற்போது யாழ். மாவட்ட மக்களையும் கிளிநொச்சி மாவட்ட மக்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் ஒரு விடயமாக மாறியுள்ளதாக வீ.ஆனந்தசங்கரி தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய நிலைமை சரியாக மக்களுக்கு விளங்கப்படுத்தப்படவில்லை எனவும் இதன் காரணமாக சிலர் தப்பான கருத்துக்களைக் கூறி மக்களைத் தவறான வழிக்கு இட்டுச் செல்ல முடியும் எனவும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தொழில்நுட்பவியலாளர்கள், நிபுணர்கள்,அரசியல்வாதிகள் அரச அதிகாரிகள் என பலருடனும் இந்த விடயம் குறித்து கூட்டங்கள் நடத்தப்பட்டு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ள போதிலும் இன்னும் உரிய முடிவு எட்டப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இரணைமடு திட்டத்திற்குப் பதிலாக ஆறுமுகத்திட்டமே சிறந்தது என்பதனை தான் தொடர்ந்தும் நினைவுபடுத்த விரும்புவதாக வீ.ஆனந்தசங்கரி, வட மாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அமரர் ஆறுமுகத்துடன் நன்றாகப் பழகி அவரின் திட்டத்தை முழுமையாக அறிந்துவைத்திருக்கும் பொறியியலாளர் டீ.எல்.ஓ மெண்டிஸின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வது மிகவும் சிறந்தது எனவும் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

குடிநீருக்காக இரணைமடு குளத்தை மாத்திரம் நம்பியிருப்பது விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்