இந்திய மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 7; தமிழகத்தில் ஏப்ரல் 24 வாக்களிப்பு

இந்திய மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 7; தமிழகத்தில் ஏப்ரல் 24 வாக்களிப்பு

இந்திய மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 7; தமிழகத்தில் ஏப்ரல் 24 வாக்களிப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Mar, 2014 | 11:58 am

இந்திய மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 7 ஆம் திகதி முதல் 9 கட்டங்களாக நடைபெறவுள்ளது.

டெல்லியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையாளர் வி.எஸ்.சம்பத் இதனை அறிவித்துள்ளார்.

தேர்தல் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் சட்ட விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 7ஆம் திகதி முதல் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளதாகவும், பின்னர் ஏப்ரல் 9, 10, 12, 24, 30 ஆகிய திகதிகளிலும், மே மாதம் 7,12 ஆம் திகதிகளிலும் வாக்களிப்பு இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

9 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் ஏப்ரல் 24 ஆம் திகதி ஆறாவது கட்ட தேர்தலின் போது வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.

மக்களவைத் தேர்தலின் வாக்கெண்ணும் பணி மே 16ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மக்களவை தேர்தலுக்காக, இந்தியா முழுவதும் 9,30,000 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்