ஆட்பதிவுத் திணைக்களத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களுக்கு பற்றாக்குறை

ஆட்பதிவுத் திணைக்களத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களுக்கு பற்றாக்குறை

ஆட்பதிவுத் திணைக்களத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களுக்கு பற்றாக்குறை

எழுத்தாளர் Staff Writer

05 Mar, 2014 | 1:23 pm

தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஒருநாள் சேவையின் கீழ், அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வரும் பலர், விண்ணப்பங்களை சமர்ப்பித்தும் தமக்கு தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவில்லை என குறிப்பிடுகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ் சரத் குமாரவிடம் நியூஸ் பெஸ்ட் வினவியபோது, கடந்த 28 ஆம் திகதி முதல் இருமொழிகளில் தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்படுவதால், சற்றுத் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தமிழ் மொழிமூல மொழி பெயர்ப்பாளர்களுக்கு பற்றாக்குறை காணப்படுகின்றமை இதற்கான காரணமென ஆட்பதிவுத் திணைக்களம் குறிப்பிட்டது.

மூன்று வாரங்களுக்குள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வினைப் பெற்றுக்கொடுத்து, தேசிய அடையாள அட்டையை முறையாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஆர்.எம்.எஸ் சரத் குமார தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்