அசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட இந்தியப் பெண்ணுக்கு சர்வதேச வீரப்பெண் விருது

அசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட இந்தியப் பெண்ணுக்கு சர்வதேச வீரப்பெண் விருது

அசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட இந்தியப் பெண்ணுக்கு சர்வதேச வீரப்பெண் விருது

எழுத்தாளர் Bella Dalima

05 Mar, 2014 | 3:19 pm

டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் லட்சுமி அசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தொடர்ந்து போராடி வருகிறார்.

தனது 16ஆவது வயதில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர் லட்சுமி. கடந்த 2005ம் ஆண்டு, தனது நண்பனின் அண்ணனின் காதலை ஏற்றுக்கொள்ளாததினால் இவர்  மீது அசிட் வீசப்பட்டது.

இதனால் தனது முகத்தை முழுமையாக இழந்த லட்சுமியின் படிப்பு முற்றிலும் தடைப்பட்டது.  இதன் பிறகு அசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட தன்னைப் போன்றவர்களுக்கு உதவ விரும்பிய இவர், அசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், அசிட் விற்பனைக்கு எதிராகவும் பல போராட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்த விடயத்தில் உச்ச நீதிமன்றம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி 27,000 பேரிடம் கையெழுத்துப் பெற்று மனுத் தாக்கல் செய்தார்.

இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட  உச்ச நீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள் அசிட் விற்பனைக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க அரசால், ஆண்டுதோறும் வழங்கப்படும் சர்வதேச வீரப்பெண் விருதுக்கு லட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில், அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் இந்த விருதை வழங்கினார்.

ஆப்கானின் நஸ்ரீன் ஓர்யாகில், பிஜியின் ரோசிகா தியோ, மாலியின் பாத்திமா தோரி உள்ளிட்டவர்கள் லட்சுமியுடன் விருது பெற்றுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்