ராஜிவ் கொலைக் குற்றவாளிகளின் விடுதலைக்கு எதிராக மற்றுமொரு மனு தாக்கல்

ராஜிவ் கொலைக் குற்றவாளிகளின் விடுதலைக்கு எதிராக மற்றுமொரு மனு தாக்கல்

ராஜிவ் கொலைக் குற்றவாளிகளின் விடுதலைக்கு எதிராக மற்றுமொரு மனு தாக்கல்

எழுத்தாளர் Staff Writer

04 Mar, 2014 | 6:49 am

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராஜவ் காந்தி கொலை செய்யப்பட்டபோது அவருடன் கொல்லப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.

ராஜிவ் கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த அப்பாஸ் மற்றும் ஜோன் ஜோசப் உள்ளிட்ட 6 பேர், இந்திய உச்ச நீதிமன்றத்தில் இந்த  வழக்கினை தாக்கல் செய்துள்ளனர்.

இதேவேளை, தமிழக அரசு ராஜிவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கு எடுத்த முடிவிற்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனுக்களின் விசாரணை நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணையும் அன்றைய தினம் இடம்பெறுமென இந்திய உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்