ரஷ்ய படையினருக்கு அழைப்பு விடுத்த விக்டர் யனுகோவிச்

ரஷ்ய படையினருக்கு அழைப்பு விடுத்த விக்டர் யனுகோவிச்

ரஷ்ய படையினருக்கு அழைப்பு விடுத்த விக்டர் யனுகோவிச்

எழுத்தாளர் Staff Writer

04 Mar, 2014 | 12:10 pm

யுக்ரேனின் வெளியேற்றப்பட்ட ஜனாதிபதி விக்டர் யனுகோவிச் எல்லைப் பகுதியிலுள்ள மக்களை பாதுகாக்கும் பொருட்டு, ரஷ்ய படையினருக்கு அழைப்பு விடுத்ததாக ஐ.நாவிற்கான மொஸ்கோ பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு, யனுகோவிச் இரண்டு தினங்களுக்கு முன்னர் எழுத்து மூலமாக அழைப்பை விடுத்திருந்ததாக ஐ.நா பாதுகாப்பு பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிரிமியாவிலுள்ள யுக்ரேன் படையினர் சரணடைவதற்கு அல்லது அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை வரையில், ரஷ்ய இராணுவத்தினர் கால அவகாசம் வழங்கியுள்ளனர்.

இந்தத் தகவலை யுக்ரேன் பாதுகாப்புப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ரஷ்யாவின் கறுப்பு படையணியின் தலைவர் கிரிமியா மீது தாக்குதல்களை ஆரம்பிப்பதற்கு கால அவகாசம் வழங்கியுள்ளதுடன், அதனை மீறும் பட்சத்தில் தாக்குதல் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

அத்துடன் இரண்டு போர்க் கப்பல்களையும் சரணடையுமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் படை நகர்வுகளுக்கு சர்வதேச ரீதியில் எதிர்ப்பலைகள் எழுந்துள்ளபோதிலும், மக்களை பாதுகாப்பதற்காகவே இதனை முன்னெடுப்பதாக மொஸ்கோ குறிப்பிட்டுள்ளது.

கிரிமியாவின் சில பகுதிகள் தற்போது ரஷ்ய இராணுவத்தினரின் முழுமையாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

யுக்ரேனின் பாரிய இரண்டு இராணுவத் தளங்கள் முழுமையாக ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், ரஷ்ய படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகயில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வெளிபகுதிகளில் இருந்து ரஷ்யாவிற்குள் பிரவேசிக்கும் அனைத்து பகுதிகளும் மூடப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான ரஷ்ய படையினர் விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்