முதலிடத்தில் முகேஷ் அம்பானி

முதலிடத்தில் முகேஷ் அம்பானி

முதலிடத்தில் முகேஷ் அம்பானி

எழுத்தாளர் Staff Writer

04 Mar, 2014 | 6:31 am

உலக செல்வந்தர்கள் வரிசையில் பில்கேட்ஸும் இந்திய செல்வந்தர்களில் முகேஷ் அம்பானியும் முதலிடத்தில் உள்ளனர்.

சீனாவைச் சேர்ந்த சர்வதேச ஆய்வு நிறுவனமான ஹூருன், உலக பணக்காரர்களின் பட்டிலை வெளியிட்டுள்ளது. 68 நாடுகளைச் சேர்ந்த 1867 பெரும் செல்வந்தர்கள் அவர்களின் சொத்து மதிப்புக்கு ஏற்ப அந்த நிறுவனம் தரப்படுத்தியுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி சர்வதேச அளவில் 41ஆவது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 1,08,000 கோடி இந்திய ரூபாய்களாகும் இதனடிப்படையில் இந்திய செல்வந்தர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்த இந்தியரான லட்சுமி மிட்டல் 1,02,000 கோடி இந்திய ரூபாய் சொத்து மதிப்புடன் சர்வதேச அளவில் 49ஆவது இடத்திலும், இந்தியாவில் இரண்டாம் இடத்திலும் உள்ளார்.

சன் பார்மா இன்டஸ்ட்ரீஸ் அதிபர் திலிப் சிங்வி, விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜி ஆகியோர் டாடா சன்ஸ் நிறுவனத்தின் பல்லோன்ஜி மிஸ்திரி ஆகியோர் அடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.

இந்தியாவில் மொத்தம் 70 பெரும் செல்வந்தர்கள் உள்ளனர். இது ஜேர்மன், சுவிட்ஸர்லாந்து, பிரான்ஸ், ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த செல்வந்தர்களை விட அதிகமாகும். உலகில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 481 செல்வந்தர்களும் சீனாவில் 358 செல்வந்தர்களும் உள்ளனர்.

பெரும் செல்வந்தர்கள் அதிகம் வசிக்கும் 6 நகரங்களில் மும்பையும் இடம் பிடித்துள்ளது. அங்கு 33 செல்வந்தர்கள் உள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்