எவரெஸ்ட்டில் ஏறுவோர் இனி குப்பைகளை அள்ள வேண்டும்

எவரெஸ்ட்டில் ஏறுவோர் இனி குப்பைகளை அள்ள வேண்டும்

எவரெஸ்ட்டில் ஏறுவோர் இனி குப்பைகளை அள்ள வேண்டும்

எழுத்தாளர் Staff Writer

04 Mar, 2014 | 8:58 am

எவரெஸ்ட் மலைச் சிகரத்துக்கு இம்முறை வசந்த காலத்தில் செல்லும் மலையேறிகளும் அவர்களின் ஆதரவு அணியினரும் திரும்பிவரும்போது, ஒவ்வொருவரும் எவரெஸ்ட்டில் குவிந்துள்ள குப்பையில் குறைந்தது 8 கிலோகிராம் குப்பைகளை கீழே கொண்டுவர வேண்டும் என நேபாள அரசாங்கம் கூறியுள்ளது.

‘mount everest base camp’ என்ற 5,300 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ள தளத்துக்கு மேல் செல்லும் எல்லோருக்கும் இந்தப் புதிய சட்டவிதி பொருந்தும் நேபாள அரசாங்கம் அறிவித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

உலகின் உயரமான மலைச்சிகரமான எவரெஸ்டின் மீதும் அதனைச் சூழவும் கழிவுப் பொருட்கள் குவிந்துவருகின்றமை தொடர்பான கவலைகளை அடுத்தே அரசு இந்தப் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகளவான வெளிநாட்டு மலையேறிகளை ஈர்ப்பதற்காக எவரெஸ்ட் மற்றும் ஏனைய இமயமலைச் சிகரங்களுக்குச் செல்லும் தனிப்பட்ட மலையேறிகளுக்கான கட்டணத்தை கடந்த மாதம் நேபாளம் ரத்துசெய்தது.

இதனால், மலையேறிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் மலைகளில் குப்பைகள் குவிந்துவிடும் என்ற கவலைகளும் அதிகரித்தன.

மலையுச்சிகளில் குவிந்துள்ள கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கான நிகழ்ச்சித் திட்டங்கள் அவசியம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் மலையேறிகளின் குழுக்களும் நீண்டகாலமாக வலியுறுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்