உக்ரைனில் இருந்து ரஷ்யப் படைகள் வாபஸ்

உக்ரைனில் இருந்து ரஷ்யப் படைகள் வாபஸ்

உக்ரைனில் இருந்து ரஷ்யப் படைகள் வாபஸ்

எழுத்தாளர் Bella Dalima

04 Mar, 2014 | 3:54 pm

உக்ரைனின் கியவ் நகருக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி வரவிருக்கும் நிலையில், அங்கிருந்து ரஷ்யப் படைகளை திரும்பப் பெற அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.

உக்ரைன் தலைநகர் கியவில் உள்ள கிரிமீயா நகரை சுற்றிவளைத்த ரஷ்யப் படையினர், அவர்களை நோக்கி முன்னேறி வந்த உக்ரைன் வீரர்களை எச்சரிக்கும் ரீதியாக வானத்தை நோக்கி பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதனால் கிரிமீயாவில் பதற்ற நிலை நீடித்துவந்தது.

இந்நிலையில், உக்ரைன் புதிய அதிபரை சந்திப்பதற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கெர்ரி அங்கு சென்றுள்ளார்.

உக்ரைனின் புதிய தலைமையை ஏற்க முடியாது என்றும் உக்ரைனை விட்டு வெளியேறி ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ள விக்டர் யனுகோவிச்தான் அதிகாரப்பூர்வமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் என்றும் ரஷ்யப் பிரதமர் மெத்வெதேவ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்