86வது ஒஸ்கர் விருதுகள் அறிவிப்பு: 7 விருதுகளை தட்டிச் சென்றது கிராவிட்டி!

86வது ஒஸ்கர் விருதுகள் அறிவிப்பு: 7 விருதுகளை தட்டிச் சென்றது கிராவிட்டி!

86வது ஒஸ்கர் விருதுகள் அறிவிப்பு: 7 விருதுகளை தட்டிச் சென்றது கிராவிட்டி!

எழுத்தாளர் Staff Writer

03 Mar, 2014 | 11:45 am

திரைப்படத்துறையின் மிக உயரிய விருதான ஒஸ்கர் விருதுகள்  இன்று  அறிவிக்கப்பட்டுள்ளன.

பல்வேறு பிரிவுகளில் ‘கிராவிட்டி’ திரைப்படம் 7 ஒஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.

உலக திரைப்படங்களில், சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து அதற்காக ஒஸ்கர் விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறன.
Oscars-2014-2
அந்த வகையில் 86வது ஒஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவிலுள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது.

இந்த விழாவில் உலக திரைப்பட பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பெருமளவிலானோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது சிறந்த திரைப்படத்திற்கான ஒஸ்கர் விருதை ’12 இயர்ஸ் அ ஸ்லேவ்’ என்ற படம் வென்றது.

சிறந்த நடிகருக்கான விருதை மாத்யூ மெக்கொனாகே வென்றார். ‘டேலஸ் பையர்ஸ் க்ளப்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

‘டேலஸ் பையர்ஸ் க்ளப்’ படத்தில் நடித்ததற்காக ஜார்டு லெடோவுக்கு சிறந்த துணை நடிகர் விருது கிடைத்துள்ளது.

‘ப்ளூ ஜாஸ்மீன்’ படத்தில் நடித்த கேட் பிளான்செட் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்.

‘கிராவிட்டி’ திரைப்படத்தை இயக்கிய அல்போன்ஸோ குவாரன் சிறந்த இயக்குனருக்கான விருதை தட்டிச் சென்றார்.

சிறந்த ஒளிப்பதிவு,  சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இசை, சிறந்த ஒலித் தொகுப்பு, சிறந்த ஒலிக்கலவை, சிறந்த கிராபிக்ஸ்,  சிறந்த இயக்குனர் ஆகிய ஏழு விருதுகளை கிராவிட்டி தட்டிச் சென்றது.

சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருது, கேத்தரின் மார்ட்டினுக்கு ‘தி கிரேட் கேட்ஸ்பை” படத்துக்காக கிடைத்துள்ளது. ஆடை வடிவமைப்பாளர் கேத்தரின் மார்ட்டின் பெறும் 3வது ஒஸ்கார் விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த அனிமேஷன் படத்துக்கான ஒஸ்கார் விருது , ‘ஃப்ரோஸன்” படத்துக்கு கிடைத்துள்ளது. சிறந்த அனிமேஷன் குறும்படத்துக்கான விருதை ‘மிஸ்டர் ஹப்லட்’ பெற்றது.

சிறந்த ஒப்பனைக் கலைஞருக்கான விருதை ‘டல்லாஸ் பையர்ஸ் கிளப்’ படத்துக்கு லி மற்றும் மாத்யூஸ் அகியோர் பெற்றனர்.

சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான விருதை ‘தி கிரேட் பியூட்டி’ பெற்றது.

சிறந்த ஆவணப்படமாக ’20 பீட் பிரம் ஸ்டார்டம்”, சிறந்த ஆவணக் குறும்படமாக, ‘தி லேடி இன் நம்பர் 6’ படமும் பெற்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்