ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத் தடை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத் தடை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத் தடை

எழுத்தாளர் Staff Writer

03 Mar, 2014 | 7:30 pm

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் 18 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு பிரிவு உறுப்பினர் மீது நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியமை மற்றும் அமைதியின்மையை தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டில் மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் ஊடகப் பேச்சாளர் பேராசிரியர் பிரனீத் அபேசுந்தர குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின்போது, அமைதியின்மையை தோற்றுவிக்கும் நோக்கில் செயற்பட்ட மாணவர்கள் அடையாளங் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த மாணவர்கள் மனிதாபிமான கற்கைகள் மற்றும் சமூக விஞ்ஞான பீடங்களைச் சேர்ந்தவர்கள் என அவர் கூறினார்.

வகுப்புத் தடை காரணமாக, இந்த மாணவர்கள் இன்று நடைபெறவிருந்த பரீட்சைகளில் தோற்றுவதற்கு அனுமதிக்கப்படவில்லை எனவும் பல்கலைக்கழகத்தின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இந்த மாணவர்கள் தொடர்பிலான ஒழுக்காற்று விசாரணைகள் விரைவில் இடம்பெறவுள்ளதாகவும் பேராசிரியர் பிரனீத் அபேசுந்தர மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்