வெளியாகியது பீட்ஸா இயக்குனரின் ‘ஜிகர்தண்டா’ ட்ரெய்லர் (Video)

வெளியாகியது பீட்ஸா இயக்குனரின் ‘ஜிகர்தண்டா’ ட்ரெய்லர் (Video)

எழுத்தாளர் Staff Writer

03 Mar, 2014 | 10:47 pm

பீட்ஸா படத்திற்கு பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படம்  ஜிகர்தண்டா.

இரசிகர்கள் மனதில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ள இப் படத்தின் உத்தியோகபூர்வ ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

சித்தார்த், லஷ்மி மேனன் நடிப்பில் வெளிவர இருக்கும் இப்படத்தில் அட்டக்கத்தி, பீட்ஸா ஆகிய படங்களில் இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ட்ரெய்லரை காட்சியை பார்த்து பல பேர் ஆஹா ஓஹோ என்ற பாராட்டு மழை பொழிந்துள்ளனர்.

ஆடுகளம் படத்தை தயாரித்த கதிரேசன் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் மதுரையை சுற்றியே அதிக காட்சிகள் இப்படத்தில் அமைந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்