வில்கமுவ பிரதேச சபை தலைவர், முன்னாள் தலைவருக்குப் பிணை

வில்கமுவ பிரதேச சபை தலைவர், முன்னாள் தலைவருக்குப் பிணை

வில்கமுவ பிரதேச சபை தலைவர், முன்னாள் தலைவருக்குப் பிணை

எழுத்தாளர் Staff Writer

03 Mar, 2014 | 7:23 pm

தமது உத்தியோகபூர்வ வாகனத்தில் கஞ்சா போதைப்பொருளை ஏற்றிச் சென்றபோது கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வில்கமுவ பிரதேச சபையின் தலைவரும், முன்னாள் தலைவரும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நாவுல நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தலா 10 ஆயிரம் ரூபா வீதம் இரண்டு ரொக்கப் பிணையிலும், 50,000 ரூபா வீதம் இரண்டு சரீரப் பிணையிலும் சந்தேநபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

உத்தியோகபூர்வ வாகனத்தில் கஞ்சா ஏற்றிச் சென்றபோது நேற்று முன்தினம் இரவு வில்கமுவ பிரதேச சபையின் தலைவரும், முன்னாள் தலைவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பில் சட்ட மாஅதிபரின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு நாவுல நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்