இலங்கைக்கு மூன்றாம் இடம்

இலங்கைக்கு மூன்றாம் இடம்

இலங்கைக்கு மூன்றாம் இடம்

எழுத்தாளர் Staff Writer

03 Mar, 2014 | 10:13 am

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரப்படுதலில் இலங்கை மூன்றாம் இடத்தினை பிடித்துள்ளது.

இத்தரப்படுத்தலில் அவுஸ்திரேலியா முதல் இடத்தைப் பிடித்துள்ளதுடன், இந்தியா இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.

தென்னாபிரிக்க அணி நான்காம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ், ஸிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய நாடுகள் அடுத்த அடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.

இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் போட்டிகளுக்கான தரப்படுத்தலில் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் அணி உள்ளடக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

2015 உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கு தகுதி பெற்று ஆறு மாதங்கள் கடந்த பின்னர் ஆப்கானிஸ்தான் அணி இந்த மைல்கல்லை எட்டியுள்ளது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற பங்களாதேஷ் அணியை தோற்கடித்தன் மூலம் தரப்படுதலில் ஆப்கானிஸ்தான் 12ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் மீதமாகவுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெறும் பட்சத்தில் அந்த அணி 11ஆவது இடத்திற்கு முன்னேறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

icc new ratting


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்