ரஷ்யாவின் ஜி- 8 உறுப்புரிமை விவகாரம்; ஜேர்மன் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே கருத்து முரண்பாடு

ரஷ்யாவின் ஜி- 8 உறுப்புரிமை விவகாரம்; ஜேர்மன் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே கருத்து முரண்பாடு

ரஷ்யாவின் ஜி- 8 உறுப்புரிமை விவகாரம்; ஜேர்மன் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே கருத்து முரண்பாடு

எழுத்தாளர் Staff Writer

03 Mar, 2014 | 8:30 am

யுக்ரையினிலுள்ள துருப்புக்களை மீளப்பெறாவிடின் ஜி 8 கைத்தொழில் மய நாடுகளின் உறுப்புரிமையில் இருந்து ரஷ்யா நீக்கப்படும் ஆபத்து உள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

க்ரைமியா பிராந்தியத்தில் தமது நாட்டுத் துருப்புக்களை நிலைநிறுத்தும் விளாடிமீர் புட்டினின் தீர்மானத்திற்கு ஒபாமா நிர்வாகமும், மேற்குலக நாடுகளும் எதிர்ப்பை வெளியிட்ட நிலையில், கெரியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எனினும் ஜி 8 நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடாக ரஷ்யா தொடர்ந்தும் செயற்படும் என ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஜி-8அமைப்பு என்பது ஒன்றுபட்ட ஒன்றென குறிப்பிட்டுள்ள ஜேர்மன் வெளிவிவாகர அமைச்சர், யுக்ரைய்ன் விவகாரம் குறித்து ரஷ்யாவுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த முடியும் என கூறியுள்ளார்.

புட்டினின் இந்த தீர்மானம் சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இதற்கு பதில் நடவடிக்கையை மேற்கொள்வதில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் மந்த கதியிலேயே செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சுயாட்சியுள்ள க்ரைமியா பிராந்தியத்திலுள்ள மக்களுக்கு விசுவாசமான ஒருவராக தாம் இருப்பேன் என யுக்ரைய்னின் புதிய கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரியர் அட்மிரல் டெனிஸ் ஃபேசொர்ப்ஸ்ஹி தெரிவித்துள்ளார்

ரஷ்யப் படையெழுப்பின் அச்சுறுத்தல் குறித்து யுக்ரைய்ன் அரசாங்கம் எச்சரித்திருந்ததை தொடர்ந்து நேற்றுமுன்தினம் புதிய கடற்படைத்தளபதி நியமிக்கப்பட்டிருந்தார்.

க்ரைமியா பிராந்தியத்தின் தலைநகரான ஃசிம்பெரோபோலில் இரண்டு வெடிச் சத்தங்கள் கேட்ட போதிலும், உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்