முன்னணி நடிகர்களின் 6 பக்ஸை விஞ்சி 8 பக்ஸ் தோற்றத்தில் அஜித்

முன்னணி நடிகர்களின் 6 பக்ஸை விஞ்சி 8 பக்ஸ் தோற்றத்தில் அஜித்

முன்னணி நடிகர்களின் 6 பக்ஸை விஞ்சி 8 பக்ஸ் தோற்றத்தில் அஜித்

எழுத்தாளர் Staff Writer

03 Mar, 2014 | 3:55 pm

அஜித் – கெளதம் மேனன் இணையும் புதிய படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தில் முற்றிலும் இளமையாக அஜித் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இந்த திரைப்படத்தினை பற்றி பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகி வருகிறன.

இப்படத்தில் முதன் முறையாக முழு நீள பொலிஸ் அதிகாரியாக அஜித்குமார் களமிறங்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் அதிகாரி வேடம் என்பதால், உடம்பை மிகவும் குறைத்து, 8 பேக்ஸ் வைக்க திட்டமிட்டுள்ளாராம் அஜித். அதற்காக தொடர்ச்சியான பயிற்சியில் அவர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அவர் சால்ட் & பெப்பர் லுக்கில் இருந்து முற்றிலும் இளமையாக நடிக்க இருக்கிறாராம்.

முதலில் அஜித்தை சந்திக்கும் போது கூறிய, அதே பொலிஸ் அதிகாரி கதையை கையில் எடுத்திருக்கிறார் கெளதம் மேனன்.

இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேசி வருகிறார்.  5 மாதங்களில் முழுப் படப்பிடிப்பையும் முடித்து, தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

மார்ச் 15ம் திகதிக்கு பிறகு படப்பிடிப்பைத் தொடங்கவுள்ள நிலையில் நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்