புறக்கோட்டை சைனா தெருவில் தீ (காணொளி இணைப்பு)

புறக்கோட்டை சைனா தெருவில் தீ (காணொளி இணைப்பு)

எழுத்தாளர் Staff Writer

03 Mar, 2014 | 7:04 am

கொழும்பு, புறக்கோட்டை, சைனா தெருவில் உள்ள வர்த்தக  நிலையமொன்றில் நேற்றிரவு தீ பரவியுள்ளது.

நிறப்பூச்சு வர்த்தக நிலையமொன்றிலேயே நேற்றிரவு 11 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

fire3

12 தீயணைப்பு வாகனங்களை ஈடுபடுத்தி நள்ளிரவிற்குள் தீயை முழுமையாக  கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக தீயணைப்பு சேவைகள் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

fire3

தீயினால் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை எனவும், தீக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு கூறுகின்றது.

தீயினால் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்