தேசியப் பிரச்சினையை சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தை அரசாங்கமே ஏற்படுத்தியது – சிவசக்தி ஆனந்தன்

தேசியப் பிரச்சினையை சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தை அரசாங்கமே ஏற்படுத்தியது – சிவசக்தி ஆனந்தன்

எழுத்தாளர் Staff Writer

03 Mar, 2014 | 11:26 am

தேசிய பிரச்சினையை சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தை அரசாங்கமே ஏற்படுத்தியதியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்

” இந்த அரசாங்கத்துடன் பேசி எதனையுமே செய்ய முடியாது, இந்த அரசாங்கம் எதனையும் செய்ய தயாராக இல்லை. இதனால் தான் நாம் சர்வதேச சமூகத்தினை நாடவேண்டிய தேவை ஏற்பட்டது. போர்க்குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து ஜனாதிபதியும் அவர் தலைமையிலான அரசாங்கமும் எவ்விதமான நடவடிக்கையும் முன்னெடுக்காத காரணத்தினால் தான் சர்வதேச சமூக்தினை நோக்கி செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது” என கூறினார்.

ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு வழிவகுக்கும் என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்