தலிபான்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ளதாக பாகிஸ்தான் அறிவிப்பு

தலிபான்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ளதாக பாகிஸ்தான் அறிவிப்பு

தலிபான்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ளதாக பாகிஸ்தான் அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Mar, 2014 | 2:00 pm

தலிபான் மீதான விமானத் தாக்குதல்களை தாம் நிறுத்தவுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

சுமார் ஒரு மாத காலம் யுத்த நிறுத்தத்தை தலிபான்கள் அறிவித்துள்ள நிலையில். பாகிஸ்தான் அரசாங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

எனினும் தலிபான்களால் மேற்கொள்ளப்படும் வன்முறை செயற்பாடுகளுக்கு பதில் நடவடிக்கையை மேற்கொள்வதற்கான உரிமை தமக்கு உள்ளதாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

முடங்கியுள்ள அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் யுத்த நிறுத்தத்தை தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

சிறைபிடிக்கப்பட்ட 23 படையினரை கொலை செய்துள்ளதாக தலிபான்களுடன் தொடர்புடைய குழு அறிவித்திருந்த நிலையில், கடந்த மாதம் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்திருந்தன.

இதனிடையே தலிபான் தலைவரின் மறைவிடம் என சந்தேகிக்கப்படும் பகுதியில் பாகிஸ்தான் யுத்த விமானங்கள் தாக்குதல் நடத்தியதில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் அரசாங்கத்துடனான சமாதானப் பேச்சுவார்த்தைக்கு புத்துயிர் அளிக்கும் வகையில்  தலிபான்கள் ஒரு மாத கால  யுத்த நிறுத்ததை அறிவித்த பின்னரே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

போலியோ தடுப்பு ஊசி மருந்து வழங்கும் அணியினர மற்றும் பாதுகாப்பு தரப்பினர் மீதான தாக்குதலை வழிநடத்திய தலிபான் தலைவரை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற பயங்கரவாத செயற்பாட்டை அரசாங்கம் பொறுத்துக்கொள்ளாது எனவும் பதில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பாகிஸ்தானின் பாதுகாப்பு அதிகாரியொருவர் கூறியுள்ளாhர்.

போலியோ தடுப்பு ஊசி வழங்கும் அணியினர் மீதான தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டு, சில மணித்தியாலங்களில் தலிபான்கள் யுத்த நிறுத்த அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்

எனினும் தலிபான்களும் அதனுடன் தொடர்புடைய ஏனைய குழுக்களும் யுத்த நிறுத்ததிற்கு மதிப்பளிக்கும் பட்சத்திலேயே சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என பாகிஸ்தான் கூறியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்