ஜெனீவா பிரேரணை தீர்மானமிக்கதாக மாறும் – பொன் செல்வராசா

ஜெனீவா பிரேரணை தீர்மானமிக்கதாக மாறும் – பொன் செல்வராசா

எழுத்தாளர் Staff Writer

03 Mar, 2014 | 9:01 pm

ஜெனீவாவில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை அமுலாக்கம் செய்யக் கூடிய தீர்மானமாக மாறவிருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவிக்கின்றார்.

[quote]ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையிலே அமெரிக்கா இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டுவர உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரேரணைகள் கொண்டு வரப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு வரப்படவுள்ள பிரேரணை தீர்மானம் எடுக்கப்பட்டு அமுலாக்கம் செய்யக் கூடிய தீர்மானமாக மாறவிருக்கின்றது. அரசாங்கம் நாடு நாடாக சென்று பிரசாரம் செய்கின்றது. அரசாங்கத்திற்கு பயம் இந்த முறை  பிடித்துள்ளது. ஏனென்றால் நவனீதம் பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்து உண்மையை அறிந்துச் சென்றிருக்கின்றார்.[/quote]

மட்டக்களப்பு – கோட்டைக்கல்லாறு திருவள்ளுவர் விளையாட்டு கழகத்தின் வருடாந்த விளையாட்டு விழாவில் நேற்று மாலை கலந்துகொண்டபோது, அவர் இந்த விடயத்தினை கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்