ஜனாதிபதி இன்று மியன்மாருக்கு விஜயம்

ஜனாதிபதி இன்று மியன்மாருக்கு விஜயம்

ஜனாதிபதி இன்று மியன்மாருக்கு விஜயம்

எழுத்தாளர் Staff Writer

03 Mar, 2014 | 7:22 am

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மியன்மாருக்கான விஜயத்தை இன்று ஆரம்பிக்கவுள்ளார்.

மூன்றாவது பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மியன்மாருக்கு செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடக இணைப்புச் செயலாளர் விஜயானந்த ஹேரத் தெரிவிக்கின்றார்.

மாநாட்டில் ஜனாதிபதி நாளை பங்கேற்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்காளவிரிகுடாவை அண்மித்துள்ள நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான பிம்ஸ்டெக் மாநாட்டில் மியன்மார், பங்களாதேஷ், இந்தியா, தாய்லாந்து, பூட்டான், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்