சேவை செய்யக் கூடியவர்களை மாகாண சபைக்கு அனுப்புங்கள் – சுசார தினால்

சேவை செய்யக் கூடியவர்களை மாகாண சபைக்கு அனுப்புங்கள் – சுசார தினால்

எழுத்தாளர் Staff Writer

03 Mar, 2014 | 10:17 pm

பொது மக்கள் ஒரே நிலைப்பாட்டில் இருக்கின்றனர் என்பதை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த இந்த தேர்தல் சிறந்த சந்தர்ப்பம் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கம்பாஹா மாவட்ட வேட்பாளர் சட்டதரணி சுசார தினால் தெரிவித்துள்ளார்.

திவுலப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கம்பாஹா – திவுலப்பிட்டிய நெல்லிகாஹாமுல பிரசேத்தில் சட்டத்தரணி சுசார தினாலின் அலுவலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது.

[quote]எம்மால் செய்ய முடியாது என முழு உலகமும் கூறியப் போது எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அதனை செய்து முடித்தார். ஆனால் சிறு விடயங்களை சுட்டிக்காட்டி இலங்கையை விமர்சிக்கின்றனர். உங்களுக்காக சேவை செய்ய கூடியவர்களை மாகாண சபைக்கு அனுப்புங்கள். அபோன்று இந்த தேர்தல் முடிவுகள் எமக்கு மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் சர்வதேச ரீதியில் எமது நாட்டிற்கு எதிராக பல்வேறு அழுத்தங்களை பிரயோகின்ற நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் ஜனாதிபதியுடன் இருக்கின்றனர் என்பதை வெளிப்படுத்த முடியும்.  குழந்தைகளின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு அவதானமாக வாக்களிக்குமாறு உங்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்