செல்வந்தர்கள் பட்டியலில் பில் கேட்ஸ்  மீண்டும் முதலிடம்

செல்வந்தர்கள் பட்டியலில் பில் கேட்ஸ் மீண்டும் முதலிடம்

செல்வந்தர்கள் பட்டியலில் பில் கேட்ஸ் மீண்டும் முதலிடம்

எழுத்தாளர் Staff Writer

03 Mar, 2014 | 9:09 pm

உலகிலுள்ள செல்வந்தர்கள் பட்டியலில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகர் பில் கேட்ஸ் மீண்டும் முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

உலகிலுள்ள செல்வந்தர்கள் தொடர்பில் போப்ஸ் சஞ்சிகை வருடாந்தம் நடத்தும் ஆய்வில் பில் கேட்ஸ் முதலிடத்தை கைப்பற்றியுள்ளார்.

2013 ஆம் ஆண்டு 67 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட பில் கேட்ஸின் சொத்து மதிப்பு இந்த வருடம் 76 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

இரண்டாம் இடத்தினை மெக்ஸிக்கோவின் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பிரமுகர் கார்லொஸ் சிலிம் தன்வசப்படுத்தியுள்ளார்.

போப்ஸ் சஞ்சிகை உலகிலுள்ள  1,645 செல்வந்தர்களை பட்டியல் படுத்தியுள்ளது.

போப்ஸ் சஞ்சிகைக்கு அமைய, கடந்த 20 வருடங்களில் 15 தடவைகள் பில் கேட்ஸ் முதலிடத்தைப் பெற்றிருந்தார்.

பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் ஸ்தாபகர் மார்க் சக்கர்பேர்க் உட்பட தொழில்நுட்பவியல் வல்லுனர்களே இந்தப் பட்டியலில் முன்னிலையில் உள்ளனர்.

சமூக வலைத்தளங்களின் பங்குகள் காரணமாக அவரது சொத்தின் பெறுமதி இம்முறை இரட்டிப்பாகி உள்ளமை ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த 492 பேரும், ஐரோப்பிய வலயத்தைச் சேர்ந்த 468 பேரும் ஆசியாவைச் சேர்ந்த 444 பேரும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

அல்ஜீரியா, லிதுவேனியா, தன்சானியா மற்றும் உகண்டா ஆகிய நாடுகள் இம்முறை முதற்தடவையாக போப்ஸ் பட்டியலில் இணைந்துகொண்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்