இயக்கச்சியில் காணிகள் நில அளவை திணைக்களத்தினால் மதிப்பீடு; உரிமையாளர்கள் எதிர்ப்பு

இயக்கச்சியில் காணிகள் நில அளவை திணைக்களத்தினால் மதிப்பீடு; உரிமையாளர்கள் எதிர்ப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Mar, 2014 | 7:54 pm

கிளிநொச்சி, இயக்கச்சியிலுள்ள காணிகள் நில அளவை திணைக்களத்தினால் இன்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.

தமது காணிகளை கையகப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக இயக்கக்கச்சி பகுதி நில உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில், நில அளவை மேற்கொள்வதற்காக, கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தினால் காணி உரிமையாளர்கள் இன்று காலை அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை அதிகாரிகளுக்கும், காணி உரிமையாளர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

எவ்வாறாயினும், காணிகளை அரச உடமையாக்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் நியூஸ் பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்