ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மீண்டும் தோல்வி

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மீண்டும் தோல்வி

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மீண்டும் தோல்வி

எழுத்தாளர் Staff Writer

03 Mar, 2014 | 8:03 am

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கெதிரான நேற்றைய விறுவிப்பான போட்டியில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட்டால் மயிரிழையில் வெற்றியீட்டியது

இந்திய அணி இந்த தொடரில் தொடர்ச்சியாக இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ள நிலையில்., இறுதிப் போட்டிக்கு அந்த அணி தகுதி பெறும் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

டாக்காவில் நடைபெற்ற இந்தப் போட்டியில்  246 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடி  பாகிஸ்தான் அணி 49 தசம் 4 ஒவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 249 ஒட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.

போட்டியில் வெற்றிபெறுவதற்கு இறுதி ஒவரில் 10 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில், ஒன்பதாவது விக்கெட்டையும் பாகிஸ்தான் இழந்த போதிலும், ஷஹீட் அப்ரிடி அடுத்தடுத்த இரண்டு சிக்ஸர்களை விளாசி அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்