நவநீதம் பிள்ளை கோருவதற்கு அமைவாக சர்வதேச விசாரணை தேவை – சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம்

நவநீதம் பிள்ளை கோருவதற்கு அமைவாக சர்வதேச விசாரணை தேவை – சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம்

நவநீதம் பிள்ளை கோருவதற்கு அமைவாக சர்வதேச விசாரணை தேவை – சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம்

எழுத்தாளர் Staff Writer

28 Feb, 2014 | 7:12 pm

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் மற்றும் யுதத்திற்கு பின்னரான மனித உரிமை சட்ட மீறல்கள் குறித்து, மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை கோருவதற்கு அமைவாக சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் தொடர்பான கற்கை நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து நிறைவேற்று அதிகாரம் தொடர்பான “ஆய்வு மற்றும் சமநிலை பெறிமுறை” ஒழுங்கமைக்கப்பட்ட வகையில் அகற்றப்படுவதாக சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் தொடர்பான கற்கை நிறுவனத்தின் இணை தலைவர் பரோன்ஸ் ஹெலீனா கெனடி  அறிவித்துள்ளார்.  

குறித்த அமைப்பின் இணையத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், இலங்கையின் நீதி கட்டமைப்பு உரிய தண்டனையை வழங்க முடியாத நிலையில் இருப்பதை பல சந்தர்ப்பங்களில் அவதானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் முன்வைத்த பரிந்துரைகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் தொடர்பான கற்கை நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், எதிர்வரும் அமர்வில் அந்த பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்ட பிரேரணையை நிறைவேற்றுமாறு மனித உரிமைகள் பேரவையிடம் உறுதியான கோரிக்கையை விடுப்பதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் நீடித்த சமாதானத்தினை ஏற்படுத்துவதற்கு இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து முறையான விசாரணைகளும் சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மார்க் எலீஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்காலத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு செயற்திறனுள்ள சுயாதீன நீதிக் கட்டமைப்பு ஒன்று நிறுவப்பட வேண்டும் என அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.  


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்