வைத்தியர் எலியந்த வைட்டின் கார் மீது துப்பாக்கிப் பிரயோகம்

வைத்தியர் எலியந்த வைட்டின் கார் மீது துப்பாக்கிப் பிரயோகம்

வைத்தியர் எலியந்த வைட்டின் கார் மீது துப்பாக்கிப் பிரயோகம்

எழுத்தாளர் Staff Writer

28 Feb, 2014 | 8:38 am

வைத்தியர் எலியந்த வைட்டின் கார் மீது மிரிஹான பகுதியில் இன்று அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

ஆயினும், இந்த துப்பாக்கிப் பிரயோகத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ​தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்