விமானப்படையின் புதிய தளபதியாக கோலித அரவிந்த குணதிலக பதவிப் பிரமாணம்

விமானப்படையின் புதிய தளபதியாக கோலித அரவிந்த குணதிலக பதவிப் பிரமாணம்

எழுத்தாளர் Staff Writer

28 Feb, 2014 | 3:05 pm

இலங்கை விமானப்படையின் புதிய தளபதியாக எயார் மாஷல் கோலித அரவிந்த குணதிலக இன்று பதவி ஏற்றார்.

விமானப் படையின் 14 ஆவது தளபதியாக அவர் நியமனம் பெற்றுள்ளார்.

பண்டாரவளை புனித தோமஸ் மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்விகற்ற கோலித குணதிலக, கெடட் அதிகாரியாக 1980 ஆம் ஆண்டு விமானப் படையில் இணைந்தார்.

1982 ஆம் ஆண்டில் அவர் விமானியாக பதவியுயர்வு பெற்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது, செயற்திறனுடன் சேவையாற்றிய கோலித குணதிலக்க, “ரணவிக்ரம” மற்றும் “ரணசூர” பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

சரக்கு விமானங்கள் மற்றும் தாக்குதல் விமானங்களின் விமானியான அவர், சுமார் நான்காயிரம் மணித்தியாலங்கள் வானில் சஞ்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்தகாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்