முல்லைத்தீவிலும் எலும்புக்கூடுகள் மீட்பு; விசாரணை ஆரம்பம் (காணொளி இணைப்பு)

முல்லைத்தீவிலும் எலும்புக்கூடுகள் மீட்பு; விசாரணை ஆரம்பம் (காணொளி இணைப்பு)

எழுத்தாளர் Staff Writer

28 Feb, 2014 | 12:39 pm

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிலுள்ள காணியொன்றிலிருந்து எலும்புக்கூடுகள் சில மீட்கப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு மூங்கிலாறு வடக்கு பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான காணியொன்றில் இருந்து இந்த எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான தகவல் கிடைத்ததை அடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றிருப்பதுடன், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதற்கு முன்னரும் மன்னார், திருகோணமலை ஆகிய பகுதிகளில் மனித எலும்புக்கூடுகளும் எச்சங்களும் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், குறித்த பகுதிகளில் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், தற்போது முல்லைத்தீவிலும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்