மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வேளாண்மை அறுவடைகள் பாதிப்பு

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வேளாண்மை அறுவடைகள் பாதிப்பு

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வேளாண்மை அறுவடைகள் பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Feb, 2014 | 10:38 am

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தொடர்ந்தும் சீரற்ற வானிலை நிலவிவருவதால், பெரும்போக நெற் செய்கைகள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்திலும் நிந்தவூர், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஒலுவில் பிரதேசங்களில் மழையினால் அறுவடைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, சப்ரகமுவ, மேற்கு, தெற்கு மாகாணங்களின் சில பகுதிகளில் பிற்பகல் அல்லது மாலை வேளைகளில் மழை அல்லது இடியுடனான மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்