பிராந்தியத்தின் நெருக்கடி குறித்து ஐ.நா பாதுகாப்பு பேரவையில் கலந்துரையாடப்பட வேண்டும் -யுக்ரேன்

பிராந்தியத்தின் நெருக்கடி குறித்து ஐ.நா பாதுகாப்பு பேரவையில் கலந்துரையாடப்பட வேண்டும் -யுக்ரேன்

பிராந்தியத்தின் நெருக்கடி குறித்து ஐ.நா பாதுகாப்பு பேரவையில் கலந்துரையாடப்பட வேண்டும் -யுக்ரேன்

எழுத்தாளர் Staff Writer

28 Feb, 2014 | 7:56 pm

தமது நாட்டின் க்ரைய்மியா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவையில் கலந்துரையாட வேண்டும் என யுக்ரைய்ன் பாராளுமன்றம் கோரியுள்ளது.

பிராந்தியத்திலுள்ள விமான நிலையத்தை ரஷ்யக் கடற்படையினர் ஆக்கிரமித்துள்ளதாக யுக்ரைய்ன் உள்விவகார அமைச்சர் குற்றஞ்சாட்டிருந்த நிலையில், இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் தமது நாட்டுப் படையினர் இந்த ஆக்கிரமிப்பில் ஈடுபடவில்லை என ரஷ்யா கூறியுள்ளது.

இதனிடையே க்ரைமியா பிராந்தியத்திலுள்ள பிரதான விமான நிலையத்தையும், ரஷ்யாவிற்கு ஆதரவான ஆயுததாரிகள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஆயுதப் படைகளின் சிரேஷ்ட அதிகாரியாக ஜுரி இல்ஜின்  நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை யுக்ரைய்னின் இடைக்கால ஜனாதிபதி ஒலக்ஸ்சாண்டர் டேர்சனோவ் நிராகரித்துள்ளார்
இதனிடையே அவர் மாரடைப்பு காரணமாக வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யுக்ரைய்னின் ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றப்படுவதற்கு முன்னர் இந்த மாத ஆரம்பத்தில் இல்ஜினை பதவிக்கு நியமித்திருந்தார்.

விக்டர் யனூகோவிச் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் ரஷ்யாவிற்கும் யுக்ரைய்னுக்கும் இடையிலான உறவுகளில் பாரிய விரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்