நீர்கொழும்பு வீதியினூடான வாகன போக்குவரத்துக்கு தடை

நீர்கொழும்பு வீதியினூடான வாகன போக்குவரத்துக்கு தடை

நீர்கொழும்பு வீதியினூடான வாகன போக்குவரத்துக்கு தடை

எழுத்தாளர் Staff Writer

28 Feb, 2014 | 7:34 pm

பேலியகொட நவலோக சுற்றுவட்டத்திலிருந்து பேலியகொட மத்திய சந்தை வரையிலான நீர்கொழும்பு வீதியின் வாகன போக்குவரத்து நாளை முதல் நான்கு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்படவுள்ளது.

நீர்கொழும்பு வீதிக்கு  காபட் இடப்படுவதால் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதற்கமைய பேலியகொட நவலோக சுற்றுவட்டம் ஊடாக போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்கள், கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதியில் பேலியகொடையின் ஊடாக பிரவேசித்து, நீர்கொழும்பு வீதிக்கு செல்ல முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் பேலியகொட மத்திய சந்தைக்கு அருகில் நீர்கொழும்பு வீதியில் பிரவேசித்து அதிவேக வீதியினூடாக கொழும்பை வந்தடைய முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்