டிக்கோயாவில் வாகன விபத்து; 36 பேர் காயம்

டிக்கோயாவில் வாகன விபத்து; 36 பேர் காயம்

டிக்கோயாவில் வாகன விபத்து; 36 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

28 Feb, 2014 | 4:19 pm

ஹட்டன் டிக்கோயாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சுமார்  36 பேர் காயமடைந்துள்ளனர்.

dic 08

குறித்த விபத்தில் 22 ஆண்கள், 14 பெண்கள் அடங்கலாக மொத்தம் 36 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரி டொக்டர் அருள்குமரன்  தெரிவித்தார்.

 

dic 05

விபத்தில் பலத்த காயமடைந்த 3 பேரை நவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சாமிமலையிலிருந்து ஹட்டன் நோக்கிய பயணித்த பஸ் ஒன்றுடன் டயகம நோக்கி பயணித்த மற்றுமொரு பஸ் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

dic 03

 

dic 01

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்