சத்திர சிகிச்சை உத்தியோகத்தர்களின் பணிப் பகிஷ்கரிப்பு தொடர்கிறது

சத்திர சிகிச்சை உத்தியோகத்தர்களின் பணிப் பகிஷ்கரிப்பு தொடர்கிறது

சத்திர சிகிச்சை உத்தியோகத்தர்களின் பணிப் பகிஷ்கரிப்பு தொடர்கிறது

எழுத்தாளர் Staff Writer

28 Feb, 2014 | 10:47 am

தமது கோரிக்கைகளுக்கு எழுத்துமூலமான உறுதிமொழி வழங்கப்படும் வரை, இருதயம் மற்றும் நுரையீரல் அதிகாரிகளின் பணிப் பகிஷ்கரிப்பை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக இருதய மற்றும் நுரையீரல் தொடர்பான சிகிச்சைகளுக்கு உதவி வழங்கும்  நிபுணர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக சுகாதார அமைச்சு  அறிவித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் கமனி குணரத்ன தெரிவித்தார்.

எனினும் அது தொடர்பில் எழுத்துமூலம் அறிவிக்கும் வரை பணிப் பகிஷ்கரிப்பை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இருதய மற்றும் நுரையீரல் தொடர்பான சிகிச்சைகளுக்கு உதவி வழங்கும்  நிபுணர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நாட்டிலுள்ள பிரதான 4 வைத்தியசாலைகளின் இருதய சத்திர சிகிச்சைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் இருதய சத்திர சிகிச்சைகள் பிற்போடப்படலாம் எனவும் வைத்தியசாலைகளின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

2006 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க சம்பள சுற்றுநிரூபத்தில் காணப்படுகின்ற சம்பள முரண்பாடுகளை நீக்குமாறும், தமது கடமையின் முக்கியத்துவத்தை கருத்திற்கொண்டு அனர்த்த கொடுப்பனவையும், சிரேஷ்டத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட நிலையான மேலதிகநேர கொடுப்பனவையும் வழங்குமாறு வலியுறுத்தி இருதய மற்றும் நுரையீரல் தொடர்பான சிகிச்சைகளுக்கு உதவி வழங்கும்  நிபுணர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தேசிய வைத்தியசாலை, கண்டி வைத்தியசாலை, கராபிட்டி போதனா வைத்தியசாலை, கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளைச் சேர்ந்த 33 அதிகாரிகள் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் பங்கேற்றுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்