சட்டவிரோத மின்சாரம்; 6 பேர் கைது

சட்டவிரோத மின்சாரம்; 6 பேர் கைது

சட்டவிரோத மின்சாரம்; 6 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

28 Feb, 2014 | 6:49 pm

அக்கறைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில பகுதிகளில் சட்டவிரோதமாக மின் இணைப்புகளை பெற்று கொண்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை மின்சார சபையின் குற்ற விசாரணை பிரிவினரால் முன்னெடுக்க்பட்ட சுற்றிவளைப்பின் போது இன்று மாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை அக்கறைப்பற்று பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சார சபையின் குற்ற விசாரணை பிரிவினர் தெரிவித்தனர்.

அட்டாளைச்சேனை, ஒலுவில் மற்றும் ஆலையடிவேம்பு பகுதிகளிலே இன்று சுற்றுவளைகப்புகள் இடம்பெற்றுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் பல பகுதிகளில் அண்மை காலமாக, சட்ட விரோத மின் இணைப்புக்களை பெற்ற பலர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்