ஹன்சிகாவுடன் ஒட்டுமில்லை உறவுமில்லை – சிம்பு அதிரடி அறிவிப்பு

ஹன்சிகாவுடன் ஒட்டுமில்லை உறவுமில்லை – சிம்பு அதிரடி அறிவிப்பு

ஹன்சிகாவுடன் ஒட்டுமில்லை உறவுமில்லை – சிம்பு அதிரடி அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

26 Feb, 2014 | 5:52 pm

‘நடிகை ஹன்சிகாவுடன் எனக்கு எந்த உறவுமில்லை, அவருடனான காதல் முறிந்துவிட்டது. இனி நான் தனி ஆள்… இதற்காக வருத்தப்படவில்லை,’ என அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் நடிகர் சிம்பு.

நடிகர் சிம்புவும் ஹன்சிகாவும் அடுத்தடுத்து வாலு, வேட்டை மன்னன் படங்களில் நடித்தனர்.

இந்தப் படங்களில் நடிக்கும்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.

இது அரசல் புரசலாக வெளியில் வந்த நேரத்தில், இருவருமே ட்விட்டர் வழியாக தங்கள் காதலை வெளிப்படுத்தினார்கள்.

ஒருவரையொருவர் தீவிரமாகக் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் என்றும் அறிவித்தனர்.

ஆனால், இந்தக் காதலை ஹன்சிகாவின் அம்மா மோனா மோத்வானி ஏற்கவில்லை.
தன் மகளின் கேரியர் பாதிக்கும் என்று பதறிய அவர், இப்போதைக்கு இதைப் பற்றி யாரும் பேச வேண்டாம் என்று பேட்டி அளித்து வந்தார்.

ஆனால், சிம்புவின் தந்தை ராஜேந்தர் மகனின் காதலுக்கு ஓகே சொல்லிவிட்டார்.

இந்த நேரம் பார்த்து இயக்குநர் பாண்டிராஜ் தன் புதுப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அவர் முன்னாள் காதலி நயன்தாராவை ஒப்பந்தம் செய்தார்.

எக்காரணத்தைக் கொண்டும் நயன்தாராவுடன் சிம்பு இணையக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் ஹன்சிகா.
ஆனால், அவரைக் கண்டு கொள்ளாத சிம்பு, ஹன்சிகா என் காதலி, நயன்தாரா என் தோழி என்றெல்லாம் கூறி வந்தார்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று, தனக்கு யாருடனும் உறவில்லை என்று அறிவித்த ஹன்சிகா, தான் இனி தனி ஆள் என்று ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டார்.

இது சிம்புவைக் கடுப்பேற்றிவிட்டது. ஹன்சிகா அறிவிப்பு வெளியிட்ட இரண்டு வாரங்களுக்குள் தானே முன்வந்து, ஹன்சிகாவுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை.. உறவும் இல்லை என அறிவித்துவிட்டார்.

இன்று தனது பிஆர்ஓ மூலம் அறிவிப்பு வெளியிட்டுள்ள சிம்பு, “இனி ஹன்சிகாவுடன் எனக்கு ஒட்டுமில்லை உறவுமில்லை. இந்த உறவால் போதும் போதும் எனும் அளவுக்கு பட்டுவிட்டேன். மிகத் தீவிரமாக யோசித்த பிறகே நான் இனி தனி ஆள் என்ற என் நிலையை அறிவிக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்