யாழ்ப்பாணம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இறைச்சி விற்பனைக்குத் தடை

யாழ்ப்பாணம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இறைச்சி விற்பனைக்குத் தடை

யாழ்ப்பாணம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இறைச்சி விற்பனைக்குத் தடை

எழுத்தாளர் Staff Writer

26 Feb, 2014 | 12:47 pm

யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, புத்தளம், அம்பாறை, திருகோணமலை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாடுகள் மற்றும் ஆடுகளின் வாய் மற்றும் கால்களில் பரவி வருகின்ற கோமாரி நோயினால் மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தவிர்க்கும் வகையில் இந்த  தடை விதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, புத்தளம், அம்பாறை, திருகோணமலை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி விற்பனைக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த மாவட்டங்களில் ஆடுகள் மற்றும் மாடுகளை ஏற்றிச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் குமார டி.சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த மாவட்டங்களுக்குள்ளேயும் அங்கிருந்து வேறு மாவட்டங்களுக்கும் மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி மற்றும் சானம் ஆகியவற்றை எடுத்துச் செல்லவும் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை மாவட்டத்திலும் இந்த தடையை அமுல்படுத்துவது தொடர்பில்  கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் ஆலோசித்து வருகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected]t.lk இல் எங்களை தொடர்பு கொள்ளவும்