யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள வீடொன்றில் இளைஞரின் சடலம் மீட்பு – கொலையா?

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள வீடொன்றில் இளைஞரின் சடலம் மீட்பு – கொலையா?

எழுத்தாளர் Bella Dalima

26 Feb, 2014 | 7:45 pm

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள கட்டடமொன்றில்  இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது கொலையா அல்லது தற்கொலையா என்பதை பிரேதப் பரிசோதனையின் பின்னரே கூற முடியும் எனவும் பொலிஸார் கூறினர்.

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள கட்டடமொன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில், வவுனியா தோணிக்கல்லைச் சேர்ந்த கணேஷ் லெவின் ருக்சன் என்ற  25 வயதான இளைஞரே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.

யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொழில் புரிந்து வந்துள்ள இவர், தங்கியிருந்த கட்டடத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதே கட்டடத்தில் உள்ள வேறு ஒருவருடன் நேற்று இரவு முறுகல் நிலை ஏற்பட்டதை அடுத்து அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகம்  வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, இந்தக் கட்டடத்திற்குள்ளே தீ வைக்கப்பட்டிருந்த காட்சிகளும் எமது கெமராவில் பதிவானது.

சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்