மவுஸாகலையின் நீர் மட்டம் குறைந்துள்ளது; மஸ்கெலிய பழைய நகர் கதிரேசன் கோயிலை வழிபடும் வாய்ப்பு (Video)

எழுத்தாளர் Staff Writer

26 Feb, 2014 | 1:06 pm

மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் படிப்படியாக குறைவடைவதுடன் இந்த நீர்த் தேக்கங்களுக்குள் மூழ்கியிருந்த நகரங்கள் சில வெளியே தென்படுகின்றன.

நுவரெலியாவிலிருந்து தெற்குத் திசையில் அமைந்துள்ளது மஸ்கெலியா நகரம். இங்கே அமைந்திருந்த பழைய நகரம் மவுஸாகலை நீர் தேக்கத்தை அமைத்த போது மூழ்கிவிட்டமையால் புதிய நகரம் அதற்கு அருகிலேயே உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இன்று ஒவ்வொரு வருடமும் கோடைக்காலங்களில் மவுஸாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் குறைவதால், பழைய மஸ்கெலியா நகரை காணக்கூடியதாகயிருக்கின்றது.

பழைய மஸ்கெலியா நகரில் இருந்த இந்து கோவில், விநாயகர் கோவில், விகாரை மற்றும் பள்ளிவாசல் போன்ற வணக்கஸ்தலங்கள் இந்த நாட்களில் வெளியே தென்படுகின்றன.

மஸ்கெலிய பழைய நகரத்தில் காணப்பட்ட கதிரேசன் கோயில் முழுமையக வெளித்தோன்றியுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்