நிதி மோசடி தொடர்பில் பாராளுமன்ற ஊழியர்கள் இருவர் கைது

நிதி மோசடி தொடர்பில் பாராளுமன்ற ஊழியர்கள் இருவர் கைது

நிதி மோசடி தொடர்பில் பாராளுமன்ற ஊழியர்கள் இருவர் கைது

எழுத்தாளர் Bella Dalima

26 Feb, 2014 | 8:54 pm

நிதி மோசடி தொடர்பில் பாராளுமன்ற ஊழியர்கள் இருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற ஊழியர் கடன் மற்றும் சேமிப்பு சங்கத்தின் நிதியத்திலிருந்து இவர்கள் பணத்தை மோசடி செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்களில் ஒருவர் 45 இலட்சம் ரூபாவையும், மற்றையவர் 65 இலட்சம் ரூபாவையும் மோசடி செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்தே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சங்கத்தின் பொருளாளர் வெளிநாடொன்றிற்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான இரண்டு சந்தேகநபர்களையும் புதுக்கடை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்செய்த பின்னர், அடுத்த மாதம் 7 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்