திருமண நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார்

திருமண நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார்

திருமண நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார்

எழுத்தாளர் Staff Writer

26 Feb, 2014 | 2:08 pm

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இன்று தனது 33 வது திருமண நாளைக் கொண்டாடுகிறார்.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி கடந்த 1981 பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி லதாவை கரம் பிடித்தார்.

ரஜினி – லதா தம்பதியினரின் இரு மகள்களான ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா சினிமா துறையில் தங்களது சொந்த நிலைப்பாட்டினை உருவாக்கிக்கொண்டிருக்கின்றனர். ஐஸ்வர்யா தற்போது வை ராஜா வை திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

சௌந்தர்யா தன் அப்பா நடிக்க மோஷன் கெப்சர் தொழில்நுட்பத்தில் வெளிவர உள்ள கோச்சடையான் திரைப்படத்தின் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

வெளிவர உள்ள இந்த படைப்புக்களோடு இந்த வருடம் இனியதாய் அமைய ரஜினிகாந்திற்கும் அவரது மனைவி லதா ரஜினிகாந்திற்கும்  திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்