திருடச் சென்றவர் ஆற்றில் தவறி விழுந்து பலி

திருடச் சென்றவர் ஆற்றில் தவறி விழுந்து பலி

திருடச் சென்றவர் ஆற்றில் தவறி விழுந்து பலி

எழுத்தாளர் Staff Writer

26 Feb, 2014 | 1:42 pm

நாவலப்பிட்டியில் வேன் ஒன்றில் திருடச் சென்ற ஒருவர், ஆற்றில் தவறி விழுந்து  உயிரிழந்துள்ளார்.

நாவலப்பிட்டி –  கம்பளை வீதியிலுள்ள பாலம் ஒன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா பயணிகளின் வேன் ஒன்றில் குறித்த நபர் திருட முற்பட்டுள்ளார்.

சிவனொளிபாதமலைக்கு சென்று திரும்பிய சிலர் தமது வேனை நிறுத்தி விட்டு, ஆற்றில் குளிக்கச் சென்ற சந்தர்ப்பத்தில், குறித்த நபர் திருட முற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, சுற்றுலா பயணிகளிடம் சிக்கிக் கொண்ட  இந்த நபர் தப்பிச் சென்ற போதே நேற்று மாலை ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் சடலம் தற்போது நாவலப்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கட்டுகஸ்தோட்ட பகுதியை சேர்ந்த ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்